யாரை காப்பாற்றுவதற்காக தனது மகனை திடீரென போலீசார் கைது செய்துள்ளனர் என்று அவரது தந்தை கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் மற்றம் தயாரிடம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார்.
அவர்களிடம் கேள்வி எழுப்பி, 50 பக்க வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவிச்சந்திரன், அவசர கதியில் தனது மகனை கைது செய்துள்ளதாக கூறினார்.
இதனிடையே ஹேம்நாத்தை வரும் வியாழக்கிழமை ஆஜர்படுத்துமாறு, பொன்னேரி சிறைநிர்வாகத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ கடிதம் எழுதியுள்ளார்.