கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜி மெயில், கூகுள் டிரைவ், மேப்ஸ் உள்ளிட்ட சேவைகள் சில நிமிடங்கள் முடங்கியதால் உலகம் முழுவதும் பயனாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.
மாலை 5 மணியளவில் இணையதளம் மற்றும் செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் தனிநபர்களும், நிறுவனங்களும் பரிதவிக்க நேரிட்டது. இதனை நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் டுவிட்டரில் பதிவிட்டு கேலி செய்தனர்.
யூடியூப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், என்ன பிரச்சனை என்று ஆய்வு செய்து வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. சில நிமிடங்களுக்குப் பின் மீண்டும் வழக்கம் போல் அனைத்து சேவைகளும் சீரானதால் பயனாளர்கள் நிம்மதி அடைந்தனர்.