இந்திய பெருங்கடல் பகுதியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காணொலி காட்சி மூலமாக நடந்த மாநாட்டில் பேசிய அவர்,இந்திய பெருங்கடல் பகுதியில் ராணுவ வியூக போட்டி நடந்து வருவதாக குறிப்பிட்ட அவர்,இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஏராளமான நாடுகள் அங்கு அதிக கவனம் செலுத்துவதாக கூறினார்.
தற்போது, இந்திய பெருங்கடல் பகுதிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் பல்வேறு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன என்றும், ஆனால் தற்போது வரையில் இந்த பிராந்தியம் அமைதியாகவே இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான தேடலில் அமைதியான, நிலையான பாதுகாப்பு சூழல் தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.