சித்ராவின் உடலை காண கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த சின்னத்திரை நடிகர், சங்க தலைவரும், திரைப்பட நடிகருமான மனோபாலா சின்னத்திரை கலைஞர்கள் மட்டும்தான் இத்தகைய முடிவை அடிக்கடி எடுப்பதாகவும், இதற்கு பணிச்சுமையும் ஒரு காரணம் என்றார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மனோபாலா, சின்னத்திரை கலைஞர்கள் தான் தற்கொலை முடிவை அதிகம் எடுக்கின்றனர். வேலைப்பளுவோ இல்லை ஏதோனும் பிரச்சினை இருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்து தங்கள் மன உலைச்சலை குறைத்து கொள்ளுங்கள்.
மேலும் சின்னத்திரை நடிகை சித்ரா இறந்தது சின்னத்திரைக்கு பெரிய இழப்பு. இப்படி சின்னத்திரையில் ஒவ்வொருவரையும் இழப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. தயவு செய்து கேட்டு கொள்கிறேன் யாரும் அவசரப்பட்டு இப்படி தற்கொலை முடிவை எடுக்க முயல வேண்டாம் " Please Stop This " என்று கண்ணீருடன் மனோபாலா கேட்டு கொண்டுள்ளார்