சென்னை வில்லிவாக்கத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரியின் கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற 4 மாத கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரங்கதாஸ் காலனியை சேர்ந்த அசாருதீன் என்பவரின் மனைவியான கவுஷிபி, மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டுவிட்டு, அந்த தகவலை துணிக்கடையில் வேலைபார்க்கும் கணவரிடம் தெரிவித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். வீட்டு வாசல் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று திடீரென மோதியுள்ளது.
அந்த கார் வருமான வரித்துறை பெண் அதிகாரி ஒருவருடையது எனவும், காரை ஓட்டிவந்த பெண் விபத்தை தொடர்ந்து காரைநிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த காரை பறிமுதல் செய்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.