டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிங்கூ எல்லையில் நேற்று விவசாயிகளை சந்தித்து விட்டு திரும்பியதிலிருந்து கெஜ்ரிவால் வீட்டுக் காவலில் போலீசாரால் வைக்கப்பட்டிருப்பதாக டுவிட்டரில் ஆம் ஆத்மி பதிவு வெளியிட்டுள்ளது.
கெஜ்ரிவால் வீட்டிலிருந்து யாரும் வெளியேறவோ அல்லது உள்ளே யாரும் செல்லவோ அனுமதிக்கபடவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள டெல்லி காவல்துறை, ஆம் ஆத்மி மற்றும் பிற கட்சியினர் இடையே மோதல் ஏற்படாமல் இருக்கவே பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.