உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும், நீதிமன்ற ஊழியர்களையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக வழக்குப் பதிவானது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து கர்ணனிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், சீலிட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அண்மையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கர்ணனை ஏன், இன்னும் கைது செய்யவில்லை என அதிருப்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை, ஆவடியில் வைத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.