தமிழக மக்களிடம் எதையும் மறைத்து வாழ வேண்டிய அவசியம் ரஜினிகாந்துக்கு இல்லை எனவும், உடல்நிலை மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் விரைவில் அறிவிப்பார் எனவும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.