அரியர் தேர்வு முடிவுகள் வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையை யூ- டியூபில் வெளியிட்டதற்கு, கண்டனம் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறது. இதுதொடர்பான வழக்குகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. யூஜிசி விதிகளுக்கு முரணாக, தேர்வு நடத்தாமல் எப்படி முடிவுகளை வெளியிடலாம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குகளின் விசாரணையின்போது, மாணவர்கள் சிலர் நுழைந்து இடையூறு ஏற்படுத்தியதாகவும், யூடியூபில் ஒளிபரப்பியதற்கும், நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நீதிபதிகள் எச்சரித்தனர்.