தமிழகத்தில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் 25 மருத்துவக் கல்லூரிகளில் 584 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. இந்த உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்பில், அரசு மருத்துவர்களுக்கு, 50 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு உறுதி செய்திருந்தது. இதற்கான அரசாணையை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, தனியார் மருத்துவர்கள் செய்த மேல்முறையீடு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஷ்வரராவ், ஹேமந்த்குப்தா, அஜய் ரஸ்தோகி அமர்வில் விசாரிக்கப்பட்டது.
இதில் மத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் வாதங்களை ஏற்று, உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.