நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். தமிழகத்தில் நிவர் புயல் சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கேட்டறிந்துள்ளார்.
தமிழகத்திற்கு தேவைப்படும் உதவியும், ஒத்துழைப்பும், மத்திய அரசால் வழங்கப்படும் எனவும் அப்போது பிரதமர் தெரிவித்ததாக, தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதே போல் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியுடனும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.