எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை தகர்த்தெறிந்து, திட்டமிட்டபடி, வேல் யாத்திரை நடைபெறும் என, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் பேசிய அவர், திமுக உள்ளிட்ட கட்சிகளின் போராட்டங்களில் கூட்டம் கூடுவதையும், டாஸ்மாக்கில் கூட்டம் கூடுவதையும், அதிமுக அரசு கண்டுகொள்வதில்லை என குற்றம்சாட்டினார்.
ஆனால், சாலையோரம், ஒன்றிரண்டு பாஜகவினர் சென்றால் கூட, அவர்களை, அதிமுக அரசு கைது செய்வதாக, முருகன் தெரிவித்துள்ளார்.