சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுமென கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரவு ள் 13-ந் தேதி சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளையொட்டி, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்றும், இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், மண்டல மகர விளக்கு காலத்தையொட்டி சபரிமலை கோவில் நடை 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.