பீகார் தேர்தல் முன்னிலை நிலவரம்..!
ஜேடியூ-பாஜக+ |
ஆர்ஜேடி-காங்+ |
எல்ஜேபி+ |
மற்றவை |
125 |
110 |
00 |
08 |
மாலை 06.18
பீகார் சட்டசபை தேர்தலில் இதுவரை 61 சதவிகித வாக்குகள் எண்ணிக்கை
119 தொகுதிகளில் பாதி அளவு வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்
வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிய நள்ளிரவு வரை ஆகும்
வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆவதால் அவசரப்பட்டு முடிவுகளை வெளியிட வேண்டாம்
ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்.
7 கோடி வாக்குகளில் 4.11 கோடி வாக்குகள் மட்டுமே இதுவரை எண்ணப்பட்டுள்ளன
மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளன
----------------------------------
மாலை 05.08
பீகார் சட்டசபை தேர்தலில் இதுவரை 55 சதவிகித வாக்குகள் எண்ணிக்கை
பா.ஜ.க கூட்டணி 125 தொகுதிகளில் முன்னிலை
ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி 109 தொகுதிகளில் முன்னிலை
தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணி நடைபெறுகிறது
தொடர்ந்து பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது
பீகாரில் வாக்கு எண்ணிக்கை முடிய இரவு வரை ஆகுமென தேர்தல் ஆணையம் தகவல்
----------------------------------
பிற்பகல் 03.16
பீகார்: 40 சதவீத வாக்குகள் எண்ணிக்கை
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளில் 40 சதவீதம் எண்ணப்பட்டுள்ளன
பிற்பகல் 3 மணி வரை 1.60 கோடி வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன
மேலும் சுமார் 2.56 கோடி வாக்குகள் எண்ணப்பட வேண்டும்
40 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை
243 தொகுதிகளில் பாஜக கூட்டணி 128 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது
கொரோனா முன்னெச்சரிக்கையுடன் வாக்குகள் எண்ணப்படுவதால் தாமதம்
100 சதவீத வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க நள்ளிரவு ஆகும் என்று ஏற்கனவே அறிவிப்பு
----------------------------------
பிற்பகல் 01.54
நள்ளிரவையும் தாண்டி வாக்கு எண்ணிக்கை
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நள்ளிரவையும் தாண்டி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் - தேர்தல் ஆணையம்
பிற்பகல் 1மணி வரை சுமார் 1 கோடி வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன - தேர்தல் ஆணையம்
மேலும் 3 கோடிக்கும் அதிகமான வாக்குகளை இன்னும் எண்ண வேண்டியுள்ளது - தேர்தல் ஆணையம்
----------------------------------
பிற்பகல் 01.34
தேர்தல் ஆணையத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏன்? - தேர்தல் ஆணையம் விளக்கம்
பிற்பகல் 1மணி வரை சுமார் 1 கோடி வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன - தேர்தல் ஆணையம்
மேலும் 3 கோடிக்கும் அதிகமான வாக்குகள் இன்னும் எண்ணப்பட வேண்டும் - தேர்தல் ஆணையம்
கொரோனா காரணமாக வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன - தேர்தல் ஆணையம்
----------------------------------
பிற்பகல் 01.20
பீகார் வாக்கு எண்ணிக்கை தாமதம்
பீகாரில் 4.10 கோடி வாக்குகள் பதிவான நிலையில் தற்போது வரை 92 லட்சம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன - தலைமை தேர்தல் அதிகாரி
வழக்கமாக 26 சுற்றுகள் மட்டுமே எண்ணப்படும் நிலையில் இந்த முறை 35 சுற்றுகள் நடைபெற வேண்டி உள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி
சுற்றுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் மாலைக்கு பிறகும் வாக்கு எண்ணிக்கை தொடரும் - தலைமை தேர்தல் அதிகாரி
----------------------------------
பிற்பகல் 01.08
80 தொகுதிகளில் இழுபறி
பீகாரில் சுமார் 80 தொகுதிகளில் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் இழுபறி
ஆர்.ஜே.டி - பாஜக கூட்டணி இடையே 80 தொகுதிகளில் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவாகவே வித்தியாசம் உள்ளது
சுமார் 40 தொகுதிகளில் 500க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை நிலவரம் உள்ளது
சுமார் 7 முதல் 10 தொகுதிகளில் 200க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசரத்தில் முன்னிலை நிலவரம் உள்ளது
----------------------------------
காலை 11.35
மீண்டும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி?
பீகாரில் மீண்டும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசு அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது
மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் சுமார் 130 தொகுதிகளில் முன்னிலை
ஆட்சி அமைக்க தேவைப்படும் 122 தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை
துவக்கத்தில் பின்னடைவை சந்தித்த பாஜக கூட்டணி தற்போது ஆட்சி அமைக்கும் அளவிற்கு முன்னிலையில் உள்ளது
பாஜக சுமார் 72 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 52 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது
பீகாரில் கூட்டணிக்க தலைமை வகித்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை
----------------------------------
காலை 11.07
பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க பாஜகவிற்கு வாய்ப்பு
மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக அதிகபட்சமாக 71 தொகுதிகளில் முன்னிலை
பாஜகவிற்கு அடுத்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் 62 இடங்களில் முன்னிலை வகிக்கிறது
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 53 இடங்களில் முன்னில பெற்றுள்ளது
ஆர்.ஜே.டி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 22 இடங்களில் முன்னிலயில் உள்ளது
----------------------------------
காலை 10.58
இதுவரை முன்னிலையில் இருந்த ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவு
பாஜக வேட்பாளர்கள் சுமார் 71 இடங்களிலும் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்கள் 47 இடங்களிலும் முன்னிலை
பீகாரில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக அதிக இடங்களில் முன்னிலை
----------------------------------
காலை 10.42
பீகாரில் சுமார் 120க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை
மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக கூட்டணி 123 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை
பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 123 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது
தற்போதைய சூழலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட ஒரு இடத்தில் கூடுதலாக பாஜக கூட்டணி முன்னிலை
இதுவரை முன்னிலையில் இருந்த ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவு
----------------------------------
காலை 10.35
பாஜக கூட்டணி முன்னிலை
பீகாரில் இதுவரை பின்தங்கியிருந்த பாஜக கூட்டணி முன்னிலை
மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 114 தொகுதிகளில் பாஜக - ஜேடியூ கூட்டணி முன்னிலை
இதுவரை முன்னிலையில் இருந்த ஆர்.ஜே.டி கூட்டணி பின்தங்கியது
----------------------------------
காலை 10.00
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இழுபறி
243 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரமும் வெளியான நிலையில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லை
பீகாரில் இரண்டு கூட்டணிகளுமே 110 இடங்களுக்கு மேல் முன்னிலை
ஆளும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 110 இடங்களுக்கு மேல் முன்னிலை
எதிர்கட்சிகளின் ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணியும் 110 இடங்களுக்கு மேல் முன்னிலை
பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை பெறுவதில் இரண்டு கூட்டணிகளிலுமே இழுபறி
தனித்து போட்டியிட்ட பாஸ்வானின் லோக் ஜன சக்தி 10 இடங்களில் முன்னிலை
பீகாரில் இதர கட்சிகள் 9 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன
பீகார் தேர்தலில் ஆளும் மற்றும் எதிர்கட்சி கூட்டணி மாறி மாறி முன்னிலை
----------------------------------
காலை 9.45
பாஜக கூட்டணி முன்னிலை
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது
இதுவரை பின்தங்கியிருந்த பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முன்னிலை பெற்றது
பாஜக கூட்டணி 115 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது
ஆர்.ஜே.டி கூட்டணி 111 இடங்களில் முன்னிலை பெற்று இருக்கிறது
----------------------------------
காலை 9.40
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இழுபறி
243 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரமும் வெளியான நிலையில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லை
பீகாரில் இரண்டு கூட்டணிகளுமே 110 இடங்களுக்கு மேல் முன்னிலை
ஆளும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 110 இடங்களுக்கு மேல் முன்னிலை
எதிர்கட்சிகளின் ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணியும் 110 இடங்களுக்கு மேல் முன்னிலை
பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை பெறுவதில் இரண்டு கூட்டணிகளிலுமே இழுபறி
----------------------------------
காலை 9.34
பெரும்பான்மையை நெருங்கும் ஆர்.ஜே.டி கூட்டணி
பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணி நெருங்குகிறது
சுமார் 120 இடங்களில் ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
ஆர்.ஜே.டி கூட்டணி பெரும்பான்மை பெற மேலும் 2 தொகுதிகள் மட்டுமே தேவை
பாஜக - ஜே.டி.யு கூட்டணி 107 இடங்களில் முன்னிலை
தனித்து போட்டியிட்ட லோக் ஜனசக்தி 8 இடங்களில் முன்னிலை
----------------------------------
காலை 9.24
நெருங்கும் பாஜக
முன்னணியில் உள்ள ஆர்.ஜே.டி கூட்டணியை பாஜக கூட்டணி நெருங்குகிறது
ஆர்.ஜே.டி கூட்டணி 104 இடங்களில் முன்னிலை, பாஜக கூட்டணி 101 இடங்களில் முன்னிலை
வெறும் 3 தொகுதிகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி கூட்டணி முன்னிலையில் உள்ளது
----------------------------------
காலை 9.15
ஆர்.ஜே.டி கூட்டணி முன்னிலை
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 100 இடங்களுக்கு மேல் ஆர்.ஜே.டி காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்கிற நிலையில் 100 இடங்களுக்கு மேல் ஆர்.ஜே.டி முன்னிலை
ஆளும் ஜே.டி.யூ - பாஜக கூட்டணி 90 இடங்களுக்கு மேல் முன்னிலை
ஆளும் மற்றும் எதிர் கூட்டணிக்கு இடையே கடும் போட்டி
மிக மிக குறைவான தொகுதி எண்ணிக்கையிலேயே ஆர்.ஜே.,டி கூட்டணி முன்னிலை
தனித்து போட்டியிட்ட லோக் ஜன சக்தி கட்சி 6 இடங்களில் முன்னிலை
----------------------------------
பீகார்: பாஜக + ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆர்.ஜே.டி + காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி
ஆர்.ஜே.டி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் முன்னிலை
லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் மஹூவா தொகுதியில் முன்னிலை
----------------------------------
காலை 8.00 || 243 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது
தேர்தலில் பதிவான வாக்குகள் 55 மையங்களில் எண்ணப்படுகின்றன
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு
முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனுமதி
வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு
8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு
பீகாரில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என பிற்பகலில் தெரியும்
ஆட்சியைக் கைப்பற்ற நிதிஷ்குமார்- தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி