சென்னை கோயம்பேடு சந்தையில் இரவில் படுத்திருந்த கூலித் தொழிலாளரின் மூன்று மாதக் குழந்தை கடத்தப்பட்டது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்த ரமேஷ் அவர் மனைவி சத்தியா, இவர்களின் இரண்டு குழந்தைகள் சந்தையில் தாங்கள் பணியாற்றும் கடை முன் இரவில் உறங்கியுள்ளனர். இரவில் திடீரென விழித்துப் பார்த்தபோது அருகில் கிடத்தியிருந்த 3 மாதப் பெண் குழந்தையைக் காணவில்லை காவல்துறையினர் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வ.உ.சி சாலையில் நடைபாதையில் படுத்திருந்தவர்களின் பெண் குழந்தையை ஆடி காரில் வந்தவர்கள் கடத்திச் சென்றனர். பிராட்வே பேருந்து நிலையத்தின் நடைபாதையில் படுத்திருந்தவர்களின் ஆண்குழந்தை கடத்தப்பட்டது. ஆனால் இந்த வழக்குகளில் இதுவரை துப்புக் கிடைக்கவும் இல்லை, குழந்தைகள் மீட்கப்படவும் இல்லை.