எல்லை தகராறு தொடர்ந்தால் சீனாவுடன் மிகப்பெரிய மோதல் ஏற்படும் என்றும் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் வைரவிழாவில் காணொலி மூலம் பேசிய அவர், எல்லையில் அத்துமீறிய சீனா ராணுவம், இப்போது இந்திய ராணுவத்தின் தக்க பதிலடியால் எதிர்பாராத பின் விளைவுகளை சந்தித்து உள்ளது என்றார்.
எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மாற்றி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்ற அவர், லடாக் எல்லையில் பதற்றம் தொடர்கிறது என்றார். தொடர் அத்துமீறல்களும், அதிரடியான ராணுவ செயல்பாடுகளையும் சீனா தொடர்ந்தால், பெரிய மோதல் ஏற்படுமென அவர் எச்சரித்தார்.
வரும்காலத்தில் படைகளுக்கு தேவையான அனைத்து நவீன ஆயுதங்களும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுமென அவர் குறிப்பிட்டார். கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தான் பயங்கரவாத த்தின் ஊற்றுக்கண்ணாக உள்ளது என்ற அவர், காஷ்மீரில் ஒரு மறைமுக யுத்தத்தில் அந்நாடு ஈடுபட்டுள்ளது என்றார்.