செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல..! எஸ்.ஏ.சி கட்சிக்கு விஜய் ஆப்பு..!

Nov 06, 2020 07:21:55 AM

நடிகர் விஜய்க்கே தெரியாமல் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரன் விஜய் பெயரில் கட்சி தொடங்கி இருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். தனது ரசிகர்கள் யாரும் தந்தையின் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவித்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தன் மகனை நாயகனாக அறிமுகப்படுத்தினாலும், விஜயகாந்துடன் செந்தூரப்பாண்டி படத்தில் நடிக்கவைத்ததன் மூலம் பட்டித்தொட்டியெங்கும் நடிகர் விஜய்யை கொண்டு சேர்த்தவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகரன்..!

அடுத்தடுத்து அவரது இயக்கத்தில் விஜய் நடித்த சில படங்கள் சறுக்கினாலும் முதல் ரசிகனாக விஜய் பெயரில் மன்றம் தொடங்கிய எஸ்.ஏ.சந்திர சேகரன், 5 வருடங்களுக்கு முன்பு அதனை மக்கள் இயக்கமாக மாற்றியவர்.

தற்போது அதன் பரிணாம வளர்ச்சியாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருப்பதாக கூறி ரசிகர்களை மட்டுமல்ல நடிகர் விஜய்யையும் அதிர வைத்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன்..!

அ.இ.த.வி.ம.இ கட்சிக்கு தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ.சந்திர சேகரன், பொருளாளராக அவரது மனைவி ஷோபா சந்திரசேகர் என பெயர்களை அறிவித்ததோடு இத்தனை வருடமும் விஜய்க்காக நலத்திட்டபணிகள் செய்து வந்த ரசிகர்களின் நலன்காப்பதற்காகவே இந்த அரசியல் இயக்கத்தை தொடங்கி இருப்பதாக கூறி இருக்கிறார் எஸ்.ஏ சந்திரசேகரன்.

ஒவ்வொரு படத்திலும் நடிகர் விஜய்யை மாஸாக காட்டி இயக்குனர்கள் அவரை ரசிகர்களிடம் தளபதியாக கொண்டு சேர்த்துள்ள நிலையில் விஜய்யின் ரசிகர்கள் பலத்தை வைத்து, தேர்தல் நேரத்தில் ஆதரவு தருவதாக கூறி அரசியல் கட்சியினருடன் கூட்டணி பேரம் பேசும் நோக்கத்தில் இந்த கட்சி தொடங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஆரம்பித்த அன்றே தனது ஒற்றை அறிக்கையின் மூலம் அ.இ.த.வி.ம.இ கட்சிக்கு நடிகர் விஜய் எண்டு கார்டு போட்டுள்ளார்..!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் என் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் ஒரு அரசியல் கட்சி தொடங்கி இருப்பதாக தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன், அவர் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த தொடர்பும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் தன்னை கட்டுப்படுத்தாது என்றும் எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக எனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, பணியாற்றவோ வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அக்கட்சிக்கும் தமக்கும், தமது இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் தன்னுடைய பெயரையோ, புகைப்படத்தையோ, அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்பு படுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கை மூலம் எச்சரித்துள்ளார் விஜய்.

கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய்ய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகருக்கும் கருத்துவேறுபாடு இருந்து வந்த நிலையில் அவரது ஆதரவாளர்களை தனது இயக்கத்தில் இருந்து நீக்கி புதிய நிர்வாகிகளை விஜய் நியமித்ததாக கூறப்படுகின்றது.

பழைய நிர்வாகிகள் எஸ்.ஏ.சியிடம் புகார் தெரிவித்த நிலையில், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காகவே விஜய்க்கே தெரியாமல் அரசியல் கட்சியாக மாற்றப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்..! 


Advertisement
தனியார் மருத்துவமனையில் பணம் கையாடல் செய்த பெண் காசாளர் கைது
திருச்சியில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து
கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்
திருப்பூரில் கால்நடை மருந்தகத்தில் மோதலை தொடர்ந்து இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் தொடக்கம்..
போதை பொருட்கள் வைத்திருந்ததாக தனியார் கல்லூரி மாணவர்கள் கைது.!
விழுப்புரம் அருகே வாகன சோதனையின் போது 491 கிலோ குட்கா பறிமுதல் - ஓட்டுனர் தப்பி ஓட்டம்
அ.தி.மு.க. நிர்வாகிக்கு வெட்டு, தி.மு.க. கவுன்சிலர் கணவர் கைது..
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த "கருப்பி" என்ற பெண் சிப்பிபாறை நாய் பேருந்து மோதி உயிரிழப்பு.!
பிரியாணியில் புழு இருந்த விவகாரம் - உணவகத்திற்கு அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத்துறை.!

Advertisement
Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்


Advertisement