அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியினர் சதி மூலம் வெற்றியை தட்டிப்பறிக்க முயற்சிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தல் தொடர்பான முடிவுகள் படிப்படியாக வெளியாகி வரும் நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், தனது கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்குமெனவும், ஆனால் எதிர்க்கட்சியினர் சதி மூலம், வெற்றியை தட்டி பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் சதியை வெற்றி பெற விட மாட்டோம் என்று கூறியுள்ள டிரம்ப், இன்று இரவு பெரிய வெற்றி என்ற அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.