பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தாம் ஓய்வு பெறுவதாக டுவிட்டரில் பதிவிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளார்.
25 வயதான அவர், டென்மார்க் ஓபன் போட்டிதான் தாம் விளையாட நினைத்த கடைசி போட்டி என்றும், இத்துடன் பேட்மிண்டனுக்கு விடை கொடுக்கப்போவதாகவும் டுவிட் செய்துள்ளார்.
இது பேட்மிண்டன் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய நிலையில், தாம் ஒய்வு பெறுவது கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் என்பது போன்ற விளக்கம் ஒன்றையும் பிவி சிந்து கொடுத்துள்ளார்.