திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் காதல் திருமணம் செய்த தம்பதி பாதுகாப்புக் கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அந்தப் பெண் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறினார் என்று குறிப்பிட்ட நீதிபதி, திருமண நோக்கத்திற்காக மதம் மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குறிப்பிட்டு அந்தத் தம்பதி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.