இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நெஞ்சு வலியின் காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
61 வயதான கபில் தேவ் இந்திய அணிக்காக 131 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 225 ஒருநாள் போட்டிகளில் விளையடியுள்ளார். கபில்தேவ் 1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை பெற்று தந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
இதனிடையே கபில்தேவ் விரைவில் நலம் பெற வேண்டும் என, கவுதம் காம்பீர், அனில் கும்லே, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.