பெண்கள் குறித்து இழிவாக பேசியதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்பு வலியுறுத்தி இருக்கிறார்.
சென்னை தியாகராய நகரிலுள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வீடியோ ஒன்றில் மனு தர்மத்தை குறிப்பிட்டு பெண்கள் தொடர்பாக திருமாவளவன் பேசிய விதம் மிக கண்டிக்கதக்கது என்றார்.
கூட்டணி கட்சியிலுள்ள திமுக, காங்கிரஸ் ஏன் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் குஷ்பு கேள்வி எழுப்பினார்.