புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்னையில் கொட்டும் மழையிலும் அசைவ பிரியர்கள் காத்திருந்து மீன்கள் வாங்கிச் சென்றனர்.
காசிமேடு, சிந்தாதிரிபேட்டை மீன் மார்க்கெட்டுகளில் மீன் விற்பனை களைகட்டியது. பட்டினப்பாக்கம் மீன் சந்தையில் மழை காரணமாக விற்பனை குறைவாகவே இருந்தது. கடந்த வாரம் விற்பனையான விலையில் இருந்து 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மீன்களின் விலை உயர்ந்துள்ளன.
ஆட்டிறைச்சி கிலோ 660 ரூபாயில் இருந்து 700 ரூபாய்க்கு விற்பனையானது. சந்தைக்குள் பலரும் மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை.