ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள பண்டிகை கால ஏழு சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
பண்டிகை காலங்களில் மக்களின் வசதிக்காக 392 சிறப்பு ரயில்களை இயக்குவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இவற்றுக்கான முன்பதிவு கடந்த 15ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை எழும்பூர், புதுச்சேரி, திருவனந்தபுரம், எர்ணாகுளம், ராமேஸ்வரம் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, யஸ்வந்த்பூர் - கண்ணூர், செகந்திராபாத் - திருவனந்தபுரம் ஆகிய இரண்டு சிறப்பு இரயில்கள் இருவழி பயணமாக தினசரி இயக்கப்படுகிறது. கயா - சென்னை எழும்பூர், புவனேஸ்வர் - புதுச்சேரி, பரௌனி - எர்ணாகுளம், மாண்டியா - ராமேஸ்வரம், கோரக்பூர் - திருவனந்தபுரம் ஆகிய சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்கள் வாரம் ஒரு முறை இரு வழிப்பாதையாக இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.