உலக உணவு தினத்தையொட்டி, புதிய 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
1945ம் ஆண்டு ஐநா சபையால் எப்ஏஓ எனப்படும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில், உலக உணவு தினமான இன்று 75 ரூபாய் நாணத்தை வெளியிட்ட மோடி, 17 புதிய வகையான 8 பயிர்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அப்போது பேசிய அவர், எப்ஏஓ அமைப்பின் டைரக்டர் ஜெனரலாக இந்தியாவை சேர்ந்த வினய் ரஞ்சன் சென் பதவி வகித்த காலத்தில் கொண்டு வரப்பட்ட உலக உணவு திட்ட அமைப்புக்குதான் 2020ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் பல்வேறு நாடுகளும் பாதுகாப்பான உணவை மக்களுக்கு வழங்குவதில் பிரச்னைகளை சந்தித்ததாகவும், ஆனால் இந்திய விவசாயிகளோ உணவு தானிய உற்பத்தியில் புதிய சாதனை படைத்ததாகவும் மோடி கூறினார்.