சென்னை மெரினா கடற்கரையில், பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ள போதும், பட்டினம்பாக்கம் கடற்கரையில் பலர் குடும்பத்துடன் கூடி உற்சாகமாக உலா வந்தனர்.
மெரினாவில், அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை பொதுமக்கள் நுழையாதவாறு காவலர்கள் தடுப்புகள் அமைத்துள்ள போதும், கலங்கரை விளக்கத்துக்கு அப்பால், வழக்கமான நாட்களைப் போல், இளைஞர்கள் கடலில் குளித்தும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமல் நெருங்கி நின்று செல்பி எடுத்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.