வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக, தன்னை முன்மொழிந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு, நெஞ்சார்ந்த நன்றியை சமர்பிப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மூன்றாம் முறையாக, அதிமுக ஆட்சியைத் தொடர்கின்ற, அரசியல் புரட்சியை நிறைவேற்ற காட்ட இருப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு அவரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு, ஒரு மணிநேரம் நீடித்தது. அப்போது, வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் தனபாலின் இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர், அங்கு அவரை, 20 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.