வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, பொது விநியோக முறை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி மத்திய அரசுக்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாக சாடினார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எங்கே போராடுகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழக கரும்பு விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.