கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவை முழு சம்மதத்துடன் தான் திருமணம் செய்துகொண்டதாகவும், யாரும் கடத்தவோ, மிரட்டவோ இல்லை என்றும் கூறி பிரபுவின் மனைவி சௌந்தர்யா கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு, சௌந்தர்யாவை கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், மகளை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறி அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
ஆட்கொணர்வு மனு மீது நாளை விசாரணை நடத்தப்படுமென சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தம்மை யாரும் மிரட்டவோ, கடத்தவோ இல்லை என்றும் முழு சம்மதத்துடன் தான் எம்.எல்.ஏ பிரபுவை திருமணம் செய்துகொண்டதாகவும் சௌந்தர்யா கூறியுள்ளார்.