வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், டோக்கியோவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்து டுவிட் செய்துள்ள ஜெய்சங்கர், பல துறைகளில் இந்திய-அமெரிக்க உறவுகள் மேம்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும், நிலைத்தன்மைக்கும் இரு நாடுகளும் இணைந்து செயலாற்றும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்புக்காக ஜெய்சங்கர் ஜப்பான் தலைநகரான டோக்கியோவுக்கு சென்றுள்ளார்.