கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் பகுதிகளில் தகரம் அமைக்கப்படுவதன் காரணம் என்ன என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரியங்கா என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனது கணவருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவரை கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்ற பின் தனது வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் தகரம் வைத்து அடைத்ததாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரொனா பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அந்த பகுதியில் தகரம் வைத்து அடைக்கபடுவதன் காரணம் என்ன? என்று சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியதுடன், பதிலளிக்க உத்தரவிட்டனர்.