ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 42-ஆவது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், காணொலி மூலம் நடைபெற்று வருகிறது.
ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பை ஈடுகட்ட மாநிலங்கள், சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ஏற்றதால் ஏற்படும் வருவாய் இழப்பீட்டை ஈடுகட்ட மாநிலங்கள் கடன்பெறுவது நிதிநிலையைக் கடுமையாக பாதிக்கும் என்பதால், மத்திய அரசே இதைச் செய்ய வேண்டும் என மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன.
இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்படுமா என்பது ஜிஎஸ்டி கூட்டத்தின் முடிவில் தெரியவரும்.
இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டுள்ள நிலையில், மாநிலத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை 12 ஆயிரம் ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளார்.