குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் பிரதமரின் பயன்பாட்டுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஏர் இந்தியா ஒன் போயிங் விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.
பிரத்யேக வடிவமைப்புக்காக ஏர் இந்தியாவின் இரண்டு போயிங் 777 விமானங்கள் அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள போயிங் தொழிற்சாலைக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கு அந்த விமானங்களின் உள் அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டு, நவீன ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு முறைகள், சுய பாதுகாப்பு அறைகள், கருத்தரங்கு அறை, பத்திரிகையாளர் அறை உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு விமானங்களின் கொள்முதல் மற்றும் வடிவமைப்பு செலவு சுமார் 8400 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு விமானங்களில் முதலாவது விமானம் டெல்லி வந்துள்ள நிலையில், இரண்டாவது விமானமும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர் இந்தியா ஒன் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானங்களை விமானப்படை விமானிகள் இயக்குவார்கள்.