உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரை நோக்கி யமுனா விரைவுச் சாலையில் காரில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து நடந்து சென்ற ராகுல்காந்தியை போலீசார் தடுத்து நிறுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கீழே விழுந்தார்.
போலீசார் தன்னை கீழே தள்ளியதாகவும், லத்தியால் அடித்ததாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து தொற்றுநோய் தடுப்பு சட்டத்தை மீறியதாக ராகுல்காந்தி, பிரியங்காகாந்தியை கைது செய்த போலீசார் பின்னர் மாலையில் விடுவித்தனர்.