உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால், 19 வயது பெண் உயிரிழந்த சம்பவத்தில், பெண்ணின் குடும்பத்தினருக்கு, 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
மேலும் அந்த பெண்ணின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணின் குடும்பத்தினருடன், காணொலி காட்சி மூலம் பேசிய அவர் ஆறுதலும் கூறினார்.
இந்நிலையில், ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக, சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில், பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் குறித்து உத்திரப்பிரதேச அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு, இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.