புனேயை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் கூடுதலாக 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்க உதவும் கவி (( gavi)) அமைப்பு மற்றும் பில், மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா உள்பட குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு ஒரு டோஸ் சுமார் 220 ரூபாய் என்ற விலையில் தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே 10 கோடி டோஸ் தயாரிப்பதாக சீரம் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மொத்த எண்ணிக்கை 20 கோடி டோஸ்களாக உயர்ந்துள்ளது.
இது தவிர, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்டிராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசி தயாரிக்கவும் சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்து 3வது கட்ட பரிசோதனை நடத்தி வருகிறது