கடன் மோசடி வழக்கில், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அதிகாரிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையில் 2006-2007 ம் ஆண்டில், நேஷனல் மெடிசின் என்ற தனியார் நிறுவனத்திற்கு கடன் வழங்கியதன் மூலம் வங்கிக்கு 6.19 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
சென்னை 11 வது கூடுதல் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜவஹர் அளித்த தீர்ப்பில், வங்கி மேலாளர் கண்ணனுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 லட்ச ரூபாயும் அபராதமும் விதிக்கப்பட்டது.
நேஷனல் மெடிசின் என்ற தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் அனுராக் ஜெயினுக்கு 10ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 4 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.