சென்னை ஐ.சி.எப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் நேற்று நடந்த தீ விபத்தின் போது பணியில் இருந்த ஆர்.பி.எப். வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக கூறப்பட்ட நிலையில், இரவு பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தீ விபத்தின் போது பணியில் இருந்த காவலர் காஜா மைதீன் இன்று அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணைக்கு அஞ்சி ஆர்.பி.எப். வீரர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.