பப்ஜி வீடியோ கேம் செயலியை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதன் மீதான தடை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் எனக் கூறி பப்ஜி உள்ளிட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில் பப்ஜி செயலியை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.
இதனால் அதன் மீதான தடை எப்போது வேண்டுமானலும் நீக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், அந்த தடை தொடர்ந்து நீடிக்கும் எனவும், சீன செயலி என்பதை தாண்டி, அதன் வன்முறை தன்மை குறித்த புகார்களே தடைக்கு காரணம் எனவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.