பிரதமர் கிசான் திட்டத்தில் மோசடியாக பணம் பெற்ற போலி விவசாயிகளின் பட்டியலை தமிழக வேளாண் துறை சிபிசிஐடி யிடம் வழங்கியுள்ளது.
பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழகத்தில் 110 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த மோசடியை விசாரிக்கும் சிபிசிஐடி இதுவரை 60 பேரை கைது செய்துள்ளது.
இந்த நிலையில் மூன்று ஹெக்டர் வைத்திருக்கும் விவசாயிகளின் பட்டியலின் அடிப்படையில் போலி விவசாயிகளை கண்டறிந்து அந்த பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மோசடி தொடர்பாக தகவல் தெரிவித்தால் வெகுமதி என அறிவித்த 6 நாட்களில் 300 தகவல்கள் கிடைத்துள்ளதாக சிபிசிஐடிஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.