திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 6-ம் நாளான இன்று சர்வ பூபாள வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கமாக 6-ம் நாள் நடைபெறும் தங்க ரத வீதி உலா ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் ஜீயர்கள் திவ்ய பிரபந்தம் பாட, அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்.