போதை பொருள் விவகாரத்தில் நடிகை தீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான விசாரணையில் போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நடிகை ரியா உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனிடையே சுஷாந்த் சிங்கின் திறன் மேலாளர் ஜெயா ஷாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்தும் மேலும் சில சினிமா பிரபலங்கள் குறித்த தகவலை வெளியிட்டார்.
இதன் அடிப்படையில், நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல்பிரீத் சிங் உள்ளிட்டோருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர். மூன்று நாட்களுக்கும் ஆஜராகுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.