சக்ரா படத்தை ஒடிடி-யில் வெளியிட தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குனர் ஆனந்தன், நடிகர் விசாலை வைத்து சக்ரா என்ற பெயரில் படம் எடுத்துள்ளதால் வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆக்சன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்ட ஏற்கனவே தருவதாக ஒப்புக் கொண்டபடி நடிகர் விஷால் 8 கோடியே 29 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வரும் 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, நடிகர் விஷாலுக்கும், இயக்குனர் ஆனந்தனுக்கும் நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.