கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறக்கக் கோரும் வணிகர்களின் கோரிக்கை குறித்து, ஒரு வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசு மற்றும் சி.எம்.டி.ஏ.-வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், கோயம்பேடு வணிக வளாகத்தில் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை அனுமதித்ததுதான் கொரோனா பரவ காரணமாக இருந்ததாகவும், மொத்த விற்பனையை அனுமதிப்பதில் சிக்கல் இல்லை என்றும் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், வணிகர்கள் சங்கத்தின் விண்ணப்பத்தை ஒரு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.