முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே விலகியுள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை அமைந்த போதிலும், தமிழக அரசின் மேலாண்மையின்கீழ் அது உள்ளது.
அணையிலுள்ள நீரை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக தமிழகம், கேரளா இடையே நிலவும் பிரச்னை குறித்த வழக்கை பாப்டே தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக அதிலிருந்து பாப்டே இன்று விலகிக் கொண்டுள்ளார். அத்துடன் நீதிபதி ஆர்.எப். நாரிமன் தலைமையிலான அமர்வுக்கு விசாரணையை மாற்றி, இனிமேல் அந்த அமர்வு வழக்கை விசாரிக்கும் என அறிவித்துள்ளார்.