இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், நடிகையின் அலுவலகத்தில் கட்டிட விதிமீறல் நடந்துள்ளதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதன் ஒரு பகுதியை இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பையை மினி பாகிஸ்தான் என கங்கனா ரணாவத் கூறியதால் மாநில அரசு அவருக்கு எதிராக திரும்பி உள்ளது.
தமது அலுவலகத்தின் கட்டிட பகுதிகள் இடிக்கப்பட்டது குறித்து டுவிட்டர் பதிவிட்டுள்ள கங்கனா, ராமர் கோயிலை போல இடிக்கப்பட்ட அலுவலகம் மீண்டும் கட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அலுவலகம் இடிக்கப்பட்டதற்கு எதிராக அவர் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.