செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

ஊரடங்கு காலத்தில் வங்கி கடனுக்கான வட்டி மீதான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது

Sep 03, 2020 05:34:16 PM

ஊரடங்கு காலத்தில் கடன் தவணைக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், வாராக் கடனாக 2 மாதங்களுக்கு அறிவிக்க கூடாது என்று வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கொரோனா பாதிப்பால் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக, மாதாந்திர கடன் தவணை தொகை செலுத்துவதற்கான அவகாசத்தை கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தள்ளி வைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

எனினும், அந்த காலத்தில் வட்டிக்கு வட்டி கணக்கிடப்படுவதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டதன் காரணமாக மாதாந்திர தவணை செலுத்துவது தள்ளிவைக்கப்பட்டது, வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக அல்ல என்றும் விளக்கம் அளித்தார்.

வேண்டும் என்றே கடனை செலுத்தாமல் இருப்பவர்கள் பயனடைய முடியாது என்று வாதிட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாக இருக்கும் வங்கி துறை பலவீனமடைவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். கொரோனா தொற்றால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மருந்து, தகவல் தொழில்நுட்ப துறைகளுக்கு நல்லதே நடந்துள்ளது என்றும் அவர் வாதிட்டார். வரும் 6 ஆம் தேதி துறை வாரியாக ஆய்வு செய்து வல்லுனர் குழு வழிகாட்டு நெறிமுறைகளை அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட மொத்த கூட்டு வட்டி எவ்வளவு என்பதே தற்போதைய கேள்வி என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தவணை தள்ளிவைப்பும், அபராத வட்டியும் ஒன்றாக செயல்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இஎம்ஐ செலுத்தாதவர்களின் கணக்குகளை, அடுத்த உத்தரவு வரும் வரை 2 மாதங்களுக்கு வாராக்கடனாக வங்கிகள் அறிவிக்க கூடாது என்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 10 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.


Advertisement
பெரும்பாக்கம் அடுக்கு மாடி குடியிருப்பை சுத்தம் செய்ய நடவடிக்கை..
வேலூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..
வயல் வெளியில் உலாவிய முதலை மீட்பு - வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தகவல் கொடுத்த மக்கள்..
த.வெ.க. மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் ஜனவரியில் வெளியாகும் என தகவல்..
தலப்பாகட்டி ஹோட்டல் வெஜிடபிள் பிரியாணியில் கிடந்த பூரான் - போலீஸார் விசாரணை
ஆவடி ரயில் நிலையத்தில் ஆபத்தான முறையில் நிறுத்தப்பட்டிருக்கும் ரயிலுக்கு அடியில் புகுந்து செல்லும் பயணிகள்..
மதுபோதையில் பேருந்தை இயக்கிய பேருந்து பணிமனை மெக்கானிக் - காவல் நிலைய சுற்றுச்சுவர் மீது மோதி விபத்து
பழநி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வி.சி.க தலைவர் திருமாவளவன் .!
கோவை அருகே ஏடிஎம் மில் பணம் எடுத்துத் தருவது போல் மோசடி செய்த நபர் கைது
முடங்கிய கோயம்பேடு மார்க்கெட் - போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்..

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement