ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரியும், விதிகளை வகுக்க கோரியும் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர், விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்வது மாணவர்கள் ஆபாச இணையதளங்களுக்குள் நுழைய முடியாதபடி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.