உடல்நிலை காரணங்களுக்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2006இல் முதல்முதலாக பிரதமராக பதவியேற்ற அவர், 2007இல் உடல்நிலை காரணங்களுக்காக ராஜினாமா செய்தார். இதையடுத்து 2012ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்ற அபே, 8 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வந்தார்.
அண்மையில் 2 முறை மருத்துவமனைக்கு சென்று வந்ததால் அபேயின் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன. பிரதமர் பதவியிலிருந்து அபே விலக விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.