வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோரை தனிமைபடுத்தும் பணியை தீவிரப்படுத்தும்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் ஹர்மந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பேசிய ஹர்மந்தர் சிங், இபாஸ் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருப்பதால், வெளியூர்களில் இருந்து சென்னை வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், அவர்களை தனிமைபடுத்தி கண்காணிக்கும் பணியை தீவிரபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.
தொழிற்சாலைகளுக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த தகவல்களை சேகரித்து முறையாக தனிமைபடுத்த வேண்டும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள், வெளியிடங்களில் முகக்கவசம் அணியாதோர் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.